தட்டச்சர் பணி-சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு
சென்னை: தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
கிறித்துவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து 15.9.2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரைவில் களையப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத் தலைவர் நீதியரசர் ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மு. காசி விஸ்வநாதன்,
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஸ்ரீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலாளர் வாசு தேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு தலா 3.5 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications