கோவா-ஹைதராபாத்-துபாய்: புதிய விமான சேவை
பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து துபாய்க்குப் புதிதாக 9 சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் வாராந்திர விமான சேவையின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது துபாய் நகருக்கு வாரம் ஒருமுறை சேவையாக 48 விமான சேவைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் 12 நகரங்களிலிருந்து இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஜூன் மாதம் முதல் கோவை, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.
ஹைதராபாத் - துபாய் சேவை ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த சேவை வாரம் 3 முறை மேற்கொள்ளப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஹைதராபாத்திலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் விமானம், துபாயை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.20 மணிக்கு சென்றடையும்.
கோவா - துபாய் சேவை ஜூன் 17ம் தேதி தொடங்கப்படுகிறது. இதுவும் வாரம் மூன்று முறை சேவையாகும். செவ்வாய்க்கிழமை, வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பிற்பகல் 3.55 மணிக்கு கோவாவிலிருந்து கிளம்பி 5.40 மணிக்கு துபாயை சென்றடையும்.
இதேபோல ஜூன் 18ம் தேதி முதல் புனே - துபாய் சேவை தொடங்குகிறது. இதுவும் வாரம் மூன்று முறை சேவையாகும். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்குக் கிளம்பி, 1.45 மணிக்கு துபாயை சென்றடையும்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications