வீரர்கள் அணிவகுப்பில் மயங்கி விழுந்த ஆண்டனி
Subscribe to Oneindia Tamil

புனே தேசிய பாதுகாப்பு அகாடமியி்ல் பயிற்சி பெற்று ராணுவத்தில் சேரும் வீரர்களின் அணி வகுப்பு இன்று காலை நடந்தது. இதில் ஆண்டனி பங்கேற்று உரையாடினார்.
பின்னர் வீரர்களின் அணி வகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கிய ஆண்டனி மேடையிலேயே சரிந்து விழுந்தார். அவரை அதிகாரிகள் தூக்கி நாற்காலியில் அமர வைத்தனர்.
இதையடுத்து சுதாரித்து விழித்த ஆண்டனி, நிகழ்ச்சியைத் தொடரலாம் என்றார். அதிகாரிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிய நிலையில் மீண்டும் அவர் சரிந்தார்.
மேலும் வாந்தியும் எடுத்தார். இதையடுத்து உடனடியாக அவர் அகாடமியிலேயே உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டனிக்கு வயது 68 ஆகும்.












Click it and Unblock the Notifications