தமிழகத்தில் 29 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்

நேற்று முன் தினம் 5 கலெக்டர்கள் உள்பட பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இந் நிலையில் மாநிலம் முழுவதும் எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை நகர குற்றப் பிரிவு போக்குவரத்து துணை ஆணையர் ஜெயச்சந்திரன், நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை நகர தலைமையக துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் மாவட்ட எஸ்.பியாக்கப்பட்டுள்ளார். கோவை நகர தலைமையக துணை ஆணையராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் எஸ்.பி. முத்துச்சாமி, சென்னை தி.நகர் துணை ஆணையராகவும், தி.நகர் துணை ஆணையர் லட்சுமி, திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி துணை ஆணையர் ராமசுப்ரமணி, மாதவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை கோட்டை பாதுகாப்பு துணை ஆணையராக பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை பாதுகாப்பு துணை ஆணையர் தொண்டிராஜ், கோவை நகர போக்குவரத்து, குற்றப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோவை நகர குற்றப் பிரிவு, போக்குவரத்து துணை ஆணையர் விஜயலட்சுமி, திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை கொள்ளைத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன், கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி. வி.எஸ்.ராஜன், சென்னை மது விலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரம் துணை ஆணையர் பன்னீர் செல்வம், புளியந்தோப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். புளியந்தோப்பு துணை ஆணையர் சம்பத்குமார், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி. அமல்ராஜ், அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு எஸ்.பி. சோனல் மிஸ்ரா, ஆவின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
நீலகிரி எஸ்.பி. வித்யா குல்கர்னி, நாமக்கல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி. ஜான் நிக்கல்சன், திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எஸ்.பி. திருஞானம், சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் சிறப்பு போலீஸ் படை கமாண்டண்ட் வள்ளிநாயகம், ஆவடி சிறப்பு போலீஸ் படை (பெண்கள்) கமாண்டண்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
ஆவடி சிறப்பு போலீஸ் படை (பெண்கள்) கமாண்டண்ட் செந்தில்குமாரி, சென்னை கொள்ளைத் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் துணை ஆணையர் ஜோஷி நிர்மல்குமார், நெல்லை நகர குற்றப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ராஜசேகரன், திருச்சி ரயில்வே எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருவாரூர் எஸ்.பி. அனிஷா உசேன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி எஸ்.பி. தேன்மொழி, தஞ்சை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சை எஸ்.பி. அமித்குமார் சிங், திருவாரூருக்கு மாற்றப்பட்டுள்ளார். சிதம்பரம் இணை எஸ்.பி. செந்தில்வேலன், ராமநாதபுரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான இணை எஸ்.பி. அஸ்ரா ஹார்க், எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியிடத்தில் தொடருவார்.
பண்ருட்டி சப்-டிவிஷன் இணை எஸ்.பி. அவினாஸ்குமார், ஈரோடு மாவட்ட எஸ்.பியாக்கப்பட்டுள்ளார். தக்கலை சப்-டிவிஷன் இணை எஸ்.பி ஏஜி.பாபு, நீலகிரி எஸ்.பியாக்கப்பட்டுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications