மறுவரையறை-எம்எல்ஏ தொகுதிகளில் மீண்டும் மாற்றம்
சென்னை: தொகுதி மறு சீரமைப்பின்படி திருத்தப்பட்ட நான்கு தொகுதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள், எல்லை மறுவரையறை திருத்தச் சட்டத்தின் (2003)-ன் படி மாற்றி அமைக்கப்பட்டன. சில தொகுதிகள் நீக்கப்பட்டு, சில தொகுதிகள் சேர்க்கப்பட்டன.
தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கும் போது சில வருவாய் கிராமங்கள், ஏற்கனவே இருந்த தொகுதியில் இருந்து நீக்கப்பட்டு, அருகில் உள்ள தொகுதிகளில் சேர்க்கப்பட்டன. தொகுதிகளை எல்லை மறுவரையறை செய்து, இறுதி அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) தொகுதியில் இருந்த மாங்கடை வருவாய் கிராமம் மறுவரையறைக்குப் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் தொகுதியில் இருந்த வெள்ளிமலை பேரூராட்சி, அங்கிருந்து நீக்கப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் சேர்க்கப்பட்டது. இதற்கு ஆட்சேபனைகள் கிளம்பின.
மேலும், தர்மபுரி, கன்னியாகுமரி, வேலூர், சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் பரப்பளவில் செய்யப்பட வேண்டிய மாறுதல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இவற்றின் அடிப்படையில் சில மறுவரையறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதன்படி, எல்லப்பரப்பில் மாற்றம் செய்யப்படாமல் மாங்கடை மீண்டும் அரூர் தொகுதிக்குள் சேர்க்கப்படுகிறது. அதுபோல் வெள்ளிமலை பேரூராட்சியும் மீண்டும் கொளச்சல் தொகுதியுடன் இணைக்கப்படுகிறது.
வாணியம்பாடி தொகுதியில் தற்போது இருக்கும் வெங்கடராஜசமுத்திரம் கனகப்பட்டு ஆகியவை முறையே வெங்கடராஜபுரம் மற்றும் கவுக்கப்பட்டு என்று மாற்றப்படுகிறது. வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட வட்டமுத்தம்பட்டி, வேடுகாத்தம்பட்டி என்று மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications