மாணவிகளை மிரட்டிய நர்சிங் கல்லூரி தாளாளர் கைது
வேலூர்: கூடுதல் கட்டணம் தராத மாணவிகளை தேர்வெழுத விட மாட்டேன் என மிரட்டிய நர்சிங் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் செயிண்ட் ஜார்ஜ் நர்சிங் பயிற்சிக் கல்லூரி உள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாயதாஸ் என்ற ஏஜென்ட் கமிஷன் வாங்கிக் கொண்டு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவிகளை 2004ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
இந்த மாணவிகளிடம் ஏஜென்ட் சொன்னதை விட அதிகமாக அவ்வப்போது கட்டணம் வசூலித்துள்ளனர். ஒரு கட்டத்தி்ல் இதற்கு மேலும் கட்டணம் செலுத்த முடியாது என மாணவிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து பணம் செலுத்தாதவர்களை தேர்வு எழுத விடமாட்டோம் என்று கல்லூரி நிர்வாகம் எச்சரித்தது. அவர்களை விடுதியிலிருந்தும் வெளியேற்றியது. இது குறித்து அந்த மாணவிகள் வேலூர் போலீசில் புகார் தரவே விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார்.
இந்த மாணவிகள் தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப்பிடம் முறையிட்டனர். வேலூர் வந்த எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி மீண்டும் மாணவிகளை கல்லூரியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்.
இந் நிலையில் நேற்று காலை இந்த மாணவிகளை கல்லூரி தாளாளர் விஜய்குமார் அழைப்பதாக சொல்லி கல்லூரி முதல்வர் அனுப்பி வைத்தார்.
தாளாளரை மாணவிகள் சந்தித்தபோது 3ம் ஆண்டு தேர்வு எழுத வேண்டுமானால் இதுவரை கட்டிய பணத்துக்கு மேல் மேலும் ரூ. 1 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கல்லூரி நிர்வாகம் மீது கொடுத்துள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் வாங்கி கொள்கிறோம் என எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதை மாணவிகள் ஏற்க மறுத்தபோது, அப்படியானால் இந்த ஆண்டு நீங்கள் தேர்வெழுத முடியாது. வேறு எந்த கல்லூரியிலும் சேரவும் முடியாதவாறு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து வேலூர் டி.எஸ்.பி. சரவணனுக்கு மாணவிகள் தகவல் தந்தனர். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கல்லூரி அலுவலகத்துக்கு வந்து தாளாளர் விஜயகுமாரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications