ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடிப்பு: அக்காள்-தம்பி பலி
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதர, சகோதரிகள் விஷம் குடித்தனர். இதில் அக்காளும் தம்பியும் பலியாயினர்.
சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியும் இறந்துவிட்டார்.
இவர்களது குழந்தைகள் உத்தரகுமார் (22), அழகம்மாள் (20), பாபு (9), மணிகண்டபிரபு, செல்வகுமாரி, லட்சுமி சங்கரி.
பெற்றோரை இழந்த சகோதர-சகோதரிகள் 6 பேரும் பாட்டி காளியம்மாளின் (75) பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர்.
ஒரு விபத்தில் கண்பார்வையை இழந்த உத்தரகுமார், பாபு, மணிகண்டபிரபு ஆகியோர் சென்னையில் உள்ள தங்களது மாமாவின் கடையில் வேலை பார்த்து வந்தனர்.
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் செல்வகுமாரி படித்து வந்தார். லட்சுமிசங்கரி எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியிருந்தார்.
தந்தையின் நினைவு நாளையொட்டி சென்னையில் இருந்து உத்தர குமார், பாபு, மணிகண்டபிரபு ஆகியோர் சில நாட்களுக்கு முன் சாத்தான்குளம் வந்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் லட்சுமி சங்கரி 428 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்ததை குடும்பத்தினர் மகிழ்ச்சியிடன் கொண்டாடினர்.
இந் நிலையில் இன்று காலை மணிகண்டபிரபு விஷம் குடித்து வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது மற்ற சகோதர-சகோதரிகள் 5 பேரும் மாடியில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
6 பேரையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனிற்றி மணிகண்ட பிரபுவும், செல்வகுமாரியும் இறந்தனர். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்த சில பாத்திரங்கள் காணாமல் போனதாக பாட்டி காளியம்மாள் திட்டியுள்ளார். தங்களைத்தான் பாட்டி குற்றம் சாட்டுகிறார் என்று நினைத்து வேதனையடைந்த சகோதர- சகோதரிகள் 6 பேரும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது தற்கொலை முடிவுக்கான காரணத்தை 6 பேரும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், பாத்திரங்கள் திருட்டுப் போனதில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. பெற்றோரின் நகைகள் மற்றும் வீடு விற்ற பணத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அனைவரும் இந்த உலகத்தை விட்டே போகிறோம். என்று எழுதப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications