கன்னியாகுமரி நில அதிர்வு பகுதிகளில் குழு ஆய்வு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில் புவியியல் துறை பேராசிரியர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் பகுதிகளில் கடந்த 19ம் தேதி இரவு நில அதிர்வு ஏற்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தில் இந்த நில நடுக்கம் 2.5 ரிக்டர் புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.
இந் நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக புவியியல் துறை பேராசிரியர் ஜெயங்கொண்ட பெருமாள், தூத்துக்குடி வஉசி கல்லூரி மரைன் டெக்னலாஜி துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் நில அதிர்வு ஏற்பட்ட கன்னியாகுமரி, சின்ன முட்டம் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்,
கடந்த 19ம் தேதி கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் பகுதிகளில் பகுதிகளில் ஏற்பட்டது லேசான அதிர்வுதான். இங்கு நில அதிர்வு ஏற்பட்ட தினத்தில் இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதன் பாதிப்பே கன்னியாகுமரி மற்றும் சின்னமுட்டம் பகுதிகளில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதிகளில் புவிமாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இங்குள்ள பாறைகள் மிகவும் கடினமானவை.
எனவே இங்கு நில அதிர்வு ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. சின்னமூட்டம் மற்றும் கன்னியாகுமரி பகுதி வீடுகளில் ஏற்பட்ட விரிசல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.
இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் ஓப்படைக்கபடும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications