ஆருஷி கொலை: தல்வாருக்கு போலீஸ் சித்திரவதை?
நோய்டா: டெல்லி அருகே சிறுமி ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வாரை போலீஸார் சித்திரவதை செய்ததாக தல்வாரின் வழக்கறிஞர் பினாகி மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பினாகி மிஸ்ரா கூறுகையில், தல்வாரின் குடும்பத்தினர் அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது அவர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார்.
தூங்கக் கூட விடாமல் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கும் மேலாக அவரை அமர வைத்து நோய்டா போலீஸார் கொடுமைப்படுத்தியுள்ளனர். அவரை மன ரீதியாகவும், பயத்திலும் ஆழ்த்தி சித்திரவதைப்படுத்தியுள்ளனர்.
சிபிஐ உடனடியாக தலையிட்டு அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்த வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ, ராஜேஷ் தல்வாரை தங்களது கஸ்டடிக்கு மாற்றக் கோரி திங்கள்கிழமை நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications