For Daily Alerts
Just In
கூடங்குளம்-மேலும் 7 கண்டெய்னர்களில் யுரேனியம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று இரவு நாகர்கோவில் வழியாக மேலும் 7 கண்டெய்னகளில் யுரேனியம் கொண்டு வரப்பட்டது.
ரஷ்யாவில் இருந்து கடந்த வாரம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட யுரேனியம் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் பாதுகாப்புடன் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந் நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து 7 கண்டெய்னர் லாரிகளில் நாகர்கோவில், வழுக்குபாறை, அஞ்சுகிராமம் வழியாக கூடங்குளத்திற்கு பாதுகாப்புடன் யுரேனியம் கொண்டு வரப்பட்டது.
Comments
Story first published: Monday, June 2, 2008, 17:36 [IST]