கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு-18 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கொழும்பில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
கொழும்பு புறநகரான தேஹிவாலா என்ற இடத்தில் ரயில் நிலையத் தண்டவாளப் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதே ரயில் நிலையத்தில்தான் கடந்த வாரம் ஓடும் ரயிலில் குண்டுவெடித்து 9 பேர் கொல்லப்பட்டனர், 71 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications