எஸ்.பியின் பி.ஏவை அடித்த கமிஷனரின் பி.ஏ

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரின் உதவியாளரை மாநகர காவல்துறை ஆணையரின் உதவியாளர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறை துறை காவலர் பணியிடத்திற்கான உடல் கூறு தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலையில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் துறை ஆணையர் மஞ்சுநாதாவின் உதவியாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் தினகரன் அலுவலக உதவியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆணையரின் உதவியாளர் ஜோதி சொரூபன் கண்காணிப்பாளரின் உதவியாளர் புன்னைவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ கூறியுள்ளார். அதனை புன்னைவனம் ஓதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேரில் வந்த ஜோதி சொரூபன் புன்னைவனத்தை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் பறக்கவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தினகரன் நேரில் வந்து விசாரணை நடத்தி புன்னைவனத்திடம் ஜோதி சொரூபனை தவறுக்கு வருத்தம் தெரிவிக்க செய்ததை அடுத்து பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகளின் உதவியாளர்களின் இந்த மோதல் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+