தொடங்கியது பருவமழை-குற்றாலத்தில் குளுகுளு சீசன்
தென்காசி: தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் முதல் குற்றாலம், மேக்கரை, புளியரை, தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், ஆரியங்காவு, குண்டாறு நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கருமேகம் திரண்டு, சாரல் மழை பெய்ய தொடங்கியது.
சாரல் மழை பெய்ய தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் முழுமையாக சீசன் தொடங்கிவிடும். தற்போது மெயின் அருவியில் கொஞ்சம் போல் தண்ணீர் விழுகிறது.
படகு குழாமிற்கு ரூ.5.50 லட்சத்தில் புதிய படகுகள்
இதற்கிடையே, ஐந்தருவி படகு குழாமுக்கு ரூ. 5.50 லட்சத்தில் படகுகள் வாங்கப்படவுள்ளன.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலா துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இப்படகு குழாமில் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு சீசன் எந்நேரமும் துவங்கலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் படகு குழாமிற்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 19 புதிய படகுகள் கொண்டு வரப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக 4 படகுகள் இரு இருக்கைகள் கொண்டவை கொண்டு வரப்பட்டது. வண்ண கலரில் உள்ள இப்படகுகளில் குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மேலும் 5 படகுகள் வருகிறது. ஐந்தருவியில் தண்ணீர் கொட்டியதும் படகு குழாமிற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு விடும். படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதும் படகு சவாரி துவக்கப்படும்.-
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications