வேட்பாளராகிறார் ஓபாமா-போதிய வாக்குகளைப் பெற்றார்

Subscribe to Oneindia Tamil

Obama Hillary
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் போதுமான ஓட்டுக்களை பாரக் ஓபாமா பெற்று விட்டார். இதையடுத்து ஹில்லாரி கிளிண்டன் போட்டியிலிருந்து விலகவுள்ளார்.

வெற்றியை நோக்கி பயணிக்கும் பாரக் ஓபாமாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியி்ன் வேட்பாளரை முடிவு செய்வது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. பாரக் ஓபாமா வெற்றிக்குத் தேவையான 2,118 வாக்குகள் என்ற இலக்கை வெற்றிகரமாக தாண்டி விட்டார்.

தெற்கு டகோடா மற்றும் மான்டனா மாகாண வாக்கெடுப்புகளில் ஓபாமா முன்னிலை பெற்றதன் மூலம் இந்த வரலாற்றைப் படைத்தார் ஓபாமா. தற்போது ஓமாமாவின் வாக்குகள் 2,149.5 உயர்ந்துள்ளது. அதேசமயம் ஹில்லாரிக்கு 1,925.5 வாக்குகளே உள்ளன.

இனி எந்த வகையிலும் ஹில்லாரியால் வெற்றி பெற முடியாத நிலை உருவாகி விட்டது. இந் நிலையில் ஓபாமாவுக்கு ஹில்லாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தனது தோல்வியை பகிரங்கமாக ஹில்லாரி ஒப்புக் கொள்ளவில்லை. தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மின்னசோட்டாவில் தனது ஆதரவாளர்களிடையே ஓபாமா பேசுகையில், இன்று உங்கள் முன்பு நான் வெற்றியாளனாக நிற்கிறேன். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போகிறேன்.

இன்று நாம் புதிய வரலாறு படைத்துள்ளோம். இன்னொரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அத்தியாயம் தொடங்கவுள்ளது. அமெரிக்காவை சிறந்த எதிர்காலத்திற்கு நாம் அழைத்துச் செல்லப் போகிறோம். இது நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான தருணம் என்றார் ஓபாமா.

அதேசமயம், ஹில்லாரியுடன் நட்பை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் அவர் பேசினார். ஹில்லாரி குறித்து அவர் கூறுகையில், ஹில்லாரி கிளிண்டன் ஒரு பெண்ணாக மட்டும் அல்லாமல், துணிச்சலான முறையிலும் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஆதர்சப் பெண்மணியாக அவர் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

வேட்பாளராகத் தேவையான வாக்குகளை ஓபாமா பெற்றுள்ளதன் மூலம் கடந்த 17 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்பாளர் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பர் இன வேட்பாளர் என்ற பெருமையும் ஓபாமாவுக்குக் கிடைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் கருப்பர் இன அதிபர் என்ற சாதனையை ஓபாமா படைப்பார்.

வேட்பாளர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு அதை முறைப்படி இன்று ஹில்லாரி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்ட் மாதம் டென்வரில் நடைபெறவுள்ள ஜனநாயகக் கட்சி மாநாட்டில், கட்சியின் வேட்பாளராக பாரக் ஓபாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

ஆளும் குடியரசுக் கட்சியி்ன் சார்பி்ல் (அதிபர் புஷ் சார்ந்துள்ள கட்சி) ஜான் மெக்கெய்ன் ஓபாமாவை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+