கைவிட்ட மகன்கள்-வயதான தம்பதி தற்கொலை
சென்னை: இரு மகன்களும் தங்களைப் புறக்கணித்ததால் மனம் உடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் நரசய்யா (55). இவருடைய மனைவி பெயர் ரமணம்மா (48). இவர்களுக்கு ரமேஷ் (28), சுரேஷ் (26) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நரசய்யா கொத்தவால் சாவடி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். ரமேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுரேஷ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நரசய்யாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இந் நிலையில் இரு மகன்களும் மனைவியருடன் தனிக் குடித்தனம் போய்விட்டனர்.
தனித்து விடப்பட்ட நரசய்யாவும், ரமணம்மாவும் சாப்பிடக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். மகன்களிடம் பணம் கேட்டு போனார்கள். ஆனால் மகன்கள் உதவவில்லை.
இதனால் மன வருத்தமடைந்த நரசய்யா, சரி, பரவாயில்லை எங்களையாவது உங்களுடன் வைத்துக் கொள்ளுங்களேன் என்று கெஞ்சினார். அதற்கு மகன்கள் இருவரும், உங்களை ஒரே வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது. ஆளுக்கு ஒரு வீட்டில் இருங்கள் என்று கூறியுள்ளனர்.
மனம் உடைந்துபோன அந்த வயதான தம்பதியினர் தங்களது வீட்டுக்குத் திரும்பினர். வீட்டில் அரிசி, பருப்பு இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால் கடந்த 3 நாட்களாக அந்தத் தம்பதிகள் ஒருவேளை கூட சாப்பிட முடியாமல் பரிதவித்துள்ளனர்.
இந் நிலையில் நேற்று அதிகாலை இருவரும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே நரசய்யா உயிரிழந்தார். ரமணம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைத ஏற்படுத்தியது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications