ஆந்திராவில் கேஸ் விலை உயர்வு ரத்து-சுமையை மாநில அரசு ஏற்றது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சமையல் கேஸ் விலை உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 50 விலை உயர்வை மாநில அரசு ஏற்கவுள்ளது. இதனால் பொது மக்கள் தப்பியுள்ளனர்.
அதே போல டெல்லியில் கேஸ் விலை ரூ.10 மட்டுமே உயர்கிறது. மீதி ரூ. 40யை மாநில அரசு மானியமாக வழங்கவுள்ளது.
சமீபத்தில் பெட்ரோல், டீசலுடன் சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கேஸ் மீதான விலை உயர்வு முழுவதையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆந்திராவில் வினியோகமாகும் கேஸ் சிலிண்டெர்கள் ஒவ்வொன்றுக்கும் மாநில அரசு ரூ. 50யை மத்திய அரசிடம் வழங்கிவிடும். இதனால் மக்களுக்கு பழைய விலையிலேயே கேஸ் வினியோகிக்கப்படும்.
அந்த மாநிலத்தில் 1.05 கோடி வீட்டு கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ரத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி ரூபாய் சுமை ஏற்படும்.
டெல்லியில்..
இந் நிலையில் டெல்லியை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்தும் கேஸ் விலையை ரூ. 40 வரை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மத்திய அரசு ரூ. 50 விலை ஏற்றியுள்ள நிலையில் அதில் ரூ. 40யை மாநில அரசு மானியமாக தந்துவிடும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் கேஸ் பயன்பாட்டாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூடுதலாக செலவாகும்.
கம்யூ மாநிலங்களிலும் வரி குறைப்பு:
இதற்கிடையே இடதுசாரிகள் ஆளும் கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் நேற்று வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர்களுக்கு சோனியா- பாஜக உத்தரவு:
இதற்கிடையே பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகளைக் குறைத்து விலையை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தாங்கள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பாஜக தலைமையும் உத்தரவிட்டுள்ளனர்.
வரியை குறைக்க மாயாவதி மறுப்பு:
இந் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள விலை உயர்வே அப்படியே அமலாக்கப்படும். மாநில அரசு வரிகளைக் குறைக்காது என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
விலையை மத்திய அரசு உயர்த்தியதே தவறு, இந் நிலையில் எங்களது வரிகளைக் குறைத்து மாநிலத்தின் வருவாயையும் சீர்குலைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications