மோத வந்த லாரி-உதவி ஆர்.டி.ஓ உயிர் தப்பினார்
திண்டுக்கல்: திண்டுக்கல் உதவி ஆர்.டி.ஓவை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் உதவி வட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் செல்வகுமார். இவர் நேற்று இரவு திண்டுக்கல்-கரூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த ஓரு லாரியை தடுத்து நிறுத்த முன்றார். ஆனால் அந்த லாரி மிக வேகமாக வந்ததுடன் நிற்காமல் சென்றது. லாரி தன் மீது மோதப் போவதை உணர்ந்த செல்வகுமார் கடைசி வினாடியில் சாலையோரமாக பாய்ந்ததால் உயிர் தப்பினார்.
ஆனால் அவர் அருகே நின்றிருந்த ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் பசீர் அகமதுவின் கை மீது அந்த லாரி படுவேகத்தில் மோதி விட்டுச் சென்றதில் அவரது கை உடைந்து, நசுங்கியது.
மதுரை சாலையில் நிற்காமல் சென்ற லாரியை குறித்து காவல்துறைக்கு தகவல் தந்துவிட்டு ஜீப்பில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் விரட்டிச் சென்றனர்.
வழியில் ரயில்வே கேட் போடப்பட்டதையடு்த்து அங்கு அந்த லாரி நின்றது.
இதையடுத்து லாரியின் டிரைவரை மடக்கி பிடித்த உதவி ஆர்.டி.ஓ. செல்வகுமார் அவரை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த வி்ஸ்வநாதன் என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications