பொள்ளாச்சி-மிரட்டும் அரை நிர்வாண கொள்ளையர்கள்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் அரை நிர்வாணத்தில் வரும் கொள்ளை கும்பல் ஒன்று தினமும் மக்களை பீதி அடைய வைத்து வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியில் உள்ள சேரன் நகர், வடுகம்பாளையம், லட்சுமி நகர், திருவிக நகர், போன்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நள்ளிரவில் வரும் இந்த கொள்ளையர்கள் உடல் முழுக்க எண்ணெய் பூசியும், உடலில் ஒரே ஒரு ஜட்டி மட்டும் அணிந்தும் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தில்லை நகரில் கோபால குரு என்பவரது வீட்டில் நள்ளிரவில் ஜட்டி கொள்ளையர்கள் புகுந்தனர். சத்தம் கேட்டு கோபால குரு மனைவி விழித்து பார்த்த போது, வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளதை உறுதி செய்து கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கோபால குருவின் மனைவி பேபி, மகன் சிவநேசனை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
திருவிக நகரில் ஆறுக்குக்கும் மேற்பட்ட வீடுகளில் இது வரை ஜட்டி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications