பிரவுன் சுகர்: முன்னாள் 'வளர்ப்பு' சுதாகரனுக்கு பிடிவாரண்ட்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன். தியாகராய நகரில் உள்ள இவரது வீட்டில் 2001ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி போலீசார் சோதனை நடத்தி 16 கிராம் பிரவுன் சுகரை கைப்பற்றினர்.
இதையடுத்து சுதாகரன், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 'தோட்டம் பாஸ்கரன்', மொய்னுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை போதை பொருட்கள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் சுதாகரன். இதையடுத்து ஏற்கனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் வாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் சுதாகரன் ஆஜராகவில்லை. நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சுதாகரனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications