பெரியாறு-தமிழக என்ஜினியர்களுக்கு கேரளா புது கட்டுப்பாடு
தேக்கடி: பெரியாறு அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகள் தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட்ட பின்னரே செல்ல வேண்டும் என கேரள அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.
குமுளி-தேக்கடி எல்லையில் உள்ள பெரியாறு அணை நீரை தமிழகம் 999 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் கேரள அரசுக்கு தமிழக அரசு நிதி செலுத்தி வருகிறது.
மேலும் அணை பராமரிப்பை தமிழக அரசே மேற்கொண்டுள்ளது. இந் நிலையில், இந்த அணையின் உயரத்தை அதிகரித்தால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகளும் பாசனம் பெறும் என தமிழக அரசு கூறி வருவதை கேரளம் ஏற்க மறுக்கிறது.
அணையின் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி வருகிறது கேரளா. இதனால் இரு மாநிலகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
அணைப் பகுதி கட்டுப்பாடு முழுவதும் தமிழக அரசிடமே உள்ள நிலையில் அங்கு தமிழக பொதுப் பணித்துறை சார்பில் செயற் பொறியாளர் தலைமையில் பொறியாளர்கள் டீம் பணியாற்றி வருகிறது.
இந் நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் தேக்கடியில் உள்ள கேரள வன அலுவலகத்தில் கையெழுத்து போட்டு, அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும் என கேரள வனத்துறை திடீரென புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால் தமிழக அதிகாரிகள் கையெழுத்து போட்ட பின்னரே செல்கின்றனர்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications