இடதுசாரிகள் விமர்சனம்-விஜயகாந்த் பதில் தாக்கு
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள்.
தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது கிடையாது.
கூட்டணியில் இருந்து கொண்டே பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விட்டு இப்போது போராட்டம், பந்த் என்கிறார்கள் இடதுசாரிக் கட்சியினர்.
நான் தனி மனிதனாக தான-தர்மம் செய்துள்ளேன். ஆனால் தனி மனிதனாக மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. அதற்குத் தேவை அரசாங்கம். எனவேதான் தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பளியுங்கள். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்.
ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வேன். முடியாவிட்டால், அரசியலுக்கே குட்பை சொல்லி விட்டு போய்க் கொண்டிருப்பேன். நான் சூட்கேஸ் வாங்க நினைத்திருந்தால், அதைச் செய்து திருமண மண்டபம் உள்ளிட்ட சொத்துக்களை காப்பாற்றியிருக்கலாம்.
நான் தனியாகத்தான் நிற்பேன். அந்தத் தைரியம் எங்களுக்கு உள்ளது. தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் நான் கட்சி ஆரம்பித்தேன் என்றார் விஜயகாந்த்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications