பிஎஸ்என்எல் எஸ்டிடி கட்டணம் 50% குறைப்பு- நிமிடத்துக்கு ரூ.1.20 மட்டுமே

தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிட்டு வருகிறது பிஎஸ்என்எல். அவ்வப்போது கட்டண சலுகைகளை அறிவித்து வரும் பிஎஸ்என்எல்லைத் தொடர்ந்து பிற தனியார் நிறுவனங்களுக்கும் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நாளை நள்ளிரவு முதல் பிஎஸ்என்எல் எஸ்.டி.டி. கட்டணங்கள் 50 சதவீதம் குறைக்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் தெரிவித்தார்.
இதன் மூலம் ஒரு நிமிடத்துக்கான எஸ்டிடி கட்டணம் ரூ. 240ல் இருந்து ரூ. 1.20 ஆகிறது.
இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைவான எஸ்டிடி கட்டணம் கொண்ட சேவையை வழங்கும் தொலைபேசி நிறுவனம் என்ற பெயரை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல்லின் இந்த அதிரடியையடுத்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தக் கொள்ள தனியார் நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications