புதுச்சேரியில் திமுக-அதிமுக பயங்கர மோதல்: துப்பாக்கிச் சூடு

புதுச்சேரி நெல்லித்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதாசிவம், வேலன். இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள், கவுன்சிலர்களாக உள்ளனர். சதாசிவத்திற்கு டி.ஆர். நகர் பகுதியில் அரிசி ஆலை உள்ளது.
நேற்று மாலை இந்த ஆலைக்கு அதிமுகவைச் சேர்ந்த சிலர் கும்பலாக வந்தனர். உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.
அதேபோல வேலனுக்குச் சொந்தமான ரத்தப் பரிசோதனை மையத்திலும் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரிசி ஆலைக்கு திமுகவினர் வந்தனர். திமுக எம்.எல்.ஏ சிவாவும் அங்கு வந்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் குவிந்தனர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அது மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். கைக்குக் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், இரு தரப்பினரையும் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் கலைவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி இருமுறை எஸ்.ஐ. ஸ்ரீதர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது.
அதிமுகவினர் ஓம் சக்தி சேகர் தலைமையில் அங்கிருந்து அகன்றனர். திமுகவினர் நகர திமுக அலுவலகத்திற்குச் சென்று அங்கு ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் குதித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து பெரும் பதட்டம் நிலவி வருவதால் நெல்லித்தோப்பில் உள்ளூர் போலீஸாரோடு, ரிசர்வ் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications