ஜாதி போஸ்டர் மீது போஸ்டர்-வாலிபர் கொலை
சேரன்மகாதேவி: ஒரு ஜாதியின் போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது.
முக்கூடல் அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்த வினோத் அப்பகுதியில் உள்ள மில்லில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்தார்.
கடந்த 1ம் தேதி வினோத்தின் பெரியப்பா மகள் சரஸ்வதிக்கும், வீரவநல்லூரை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி முந்தின நாள் (31ம் தேதி) இரவு வினோத் மற்றும் நண்பர்கள் திருமண வாழ்த்து சுவரொட்டிகளை ஊர் முழுவதும் ஒட்டினர்.
மைலப்பபுரத்தில் ஒரு சமுதாயத்தின் சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரம் மீதும் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த இளவரசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றிரவு வினோத் மற்றும் 2 பேர் சைக்கிளில் சென்றபோது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்து கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தது.
அவர்களிடம் இருந்து தப்பி மூவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த கும்பல் வினோத்தை மட்டும் குறிவைத்து துரத்தி சென்று சராமரியாக வெட்டியது. இதி்ல் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications