வாக்கி டாக்கியை ஆட்டோவில் தவற விட்ட எஸ்.ஐ.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆட்டோவில் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது தனது வாக்கிடாக்கியை ஆட்டோவிலேயே விட்டு விட்டார் மதுரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வக்கனி. இவர் நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளே ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். பின்னர் ஆட்டோவை அனுப்பி விட்டார். ஆட்டோவை அனுப்பிய பிறகுதான் தனது வாக்கி டாக்கியை ஆட்டோவிலேயே விட்டு விட்டது தெரிய வந்து அதிர்ந்தார்.
அந்த ஆட்டோவையும், ஆட்டோ டிரைவரையும், தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications