குளிர்ந்தது குற்றாலம்-தொடங்கியது சாரல் மழை

தென்மேற்கு பருவமழை கடந்த வாரமே கேரள மாநிலத்தில் தொடங்கிவிட்டது. இம்மழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஓட்டியுள்ள சில பகுதிகளில் பெய்தது. இருப்பினும் குற்றாலத்தில் சீசன் சரிவர தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், மாலை நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான புளியரை, மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், குற்றாலம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேக கூட்டம் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இம்மழையினால் வெப்பத்தில் இருந்த பகுதிகள் முழுமையாக குளிர்ச்சியடைந்தன. மழையினால் குற்றால சீசன் ஒரிரு நாளில் களை கட்ட தொடங்கும். மழையின் காரணமாக தமிழக-கேரள எல்லை பகுதிகள் குளு..குளுவென்று இருந்தது. இரவு குளிர்ந்த காற்று வீசியது.
இதே நிலை நீடித்தால் குற்றால சீசன் முழுமையாக களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications