தனக்கான அரசு செலவை குறைக்க பிரதமர் உத்தரவு
டெல்லி: அமைச்சர்களையும் மக்களையும் சிக்கனமாக இருக்குமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்கட்டமாக தனக்கான அரசு செலவுகளை குறைக்க ஆரம்பித்துள்ளார்.
உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை மத்திய அரசு உயர்த்தியது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். தண்ணீரையும் கூட நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் தனித் தனியாக அனுப்பிய கடிதத்தில், தேவையில்லாத செலவுகளை குறைக்குமாறு உத்தரவிட்டார்.
மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் விமான பயண செலவை குறைக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந் நிலையில் தனக்காக அரசு செலவிடும் தொகையை குறைக்க ஆரம்பித்துள்ளார் மன்மோகன் சிங்.
ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-8 நாடுகளின் கூட்டத்தி்ல் பங்கேற்கச் செல்லும் பிரதமர் தன்னுடன் வரும் பாதுகாப்புப் படையினர், அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆணையிட்டுள்ளார்.
தன்னுடன் தேவையில்லாமல் எந்த அமைச்சரும் வெளிநாடுகளுக்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் மத்திய அரசு வாகனங்கள் அனைத்திற்கும் பெட்ரோல் செலவை கட்டுப்படுத்த அவர் உத்தரவிடுவார் எனத் தெரிகிறது. ரேஷன் முறையில் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்க அவர் உத்தரவிடலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் கருத்தரங்குகள், மாநாடுகளை 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துவதை நிறுத்துமாறு அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications