போலீஸாரால் கற்பழிப்பு- காவல் நிலையம் முன் தற்கொலை
டெல்லி: போலீஸாரால் கற்பழிக்கப்பட்ட அப்பாவிப் பெண், தனக்கு நியாயம் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானா மாநிலம் பன்ச்குலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் ஷீலா. கடந்த ஏப்ரல் 10ம் தேதி இவரை ரோதக் காவல் நிலையத்தைச் சேர்ந்த பல்ராஜ் சிங், ஷீலக்ராம் ஆகிய இரு போலீஸாரும் கற்பழித்துள்ளனர்.
26ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார் ஷீலா. புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
மே 10ம் தேதி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார் ஷீலா. ஆனாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மே 23ம் தேதி ஐடி அனில்தப்ராவை சந்தித்து முறையிட்டார் ஷீலா.
அவரது உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கற்பழிப்பு நடந்தது உண்மைதான் என்று டி.எஸ்.பி. தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மே 31ம் தேதி இரு போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மேல் நடவடிக்கை இல்லை.
மேலும், புகாரை திரும்பப் பெறுமாறு இரு போலீஸாரும், ஷீலாவை மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ஷீலா பஞ்ச்குலாவில் உள்ள மாவட்ட காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ரோதக் ஐஜி விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலைக்குத் தூண்டியதாக இரு போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட ஷீலாவுக்கு 6 வயதில் ஹீனா என்கிற மகளும், 3 வயதில் முஸ்கான் என்கிற மகளும் உள்ளனர். பன்ச்குலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஷீலா உயிரிழந்தபோது இரு குழந்தைகளும் செய்தவறியாமல் பரிதவித்து நின்றது மிகவும் பரிதாபமாக இருந்தது.
மரணமடையும் தருவாயில் ஷீலா கொடுத்த வாக்குமூலத்தில், பல்ராஜ்சிங்கும், ஷீலக் ராமும் என்னைக் கற்பழித்தனர். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினர். நான் வெளியில் சொன்னால் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட எனது கணவரை திரும்பப் பார்க்கவே முடியாது என்றும் மிரட்டினர் என்றார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications