தென்காசி கோவில் கிணற்றை தூர் வாரிய இருவர் பலி
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கிணற்றில் தூர் வாரியபோது இரு தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாடப்பள்ளியில் மிகவும் பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்றை தூர் வாருவதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்காசியை அடுத்த ஆயிரபேரி பட்டாபத்து கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் காவேரி, மாடசாமி மகன் ஆறுமுகம், சுப்பிரமணியன் மகன் சண்முகவேல், முத்துகருப்பன் மகன் ஆறுமுகம் ஆகிய 4 பேர் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 35 அடி உயரமுள்ள கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் கிடந்துள்ளது.
இதில் சுமார் 15 உயரத்திற்கு தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிய நிலையில் மீதமுள்ள 5 அடி உயர தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற முடியவில்லை. இதனையடுத்து ஆறுமுகம், சண்முகவேல், மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரும் கிணற்றுள் இறங்கி ஒரு பாறை மீது மோட்டாரை பொருத்தியுள்ளனர். பின்னர் மோட்டாரை ஸ்டார்ட் செய்தபோது புகை அதிகமாக வந்தது.
இதில் மூச்சு திணறியதால் சத்தம் போட்டனர். உடனே கிணற்றுக்கு வெளியே நின்ற காவேரி மற்றும் அங்கிருந்த சிலர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாடசாமி மகன் ஆறுமுகத்தை காப்பாற்றினர். இருப்பினும் சண்முகவேல், மற்றும் முத்துகருப்பன் மகன் ஆறுமுகம் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications