சூடானின் விமானம் வெடித்துச் சிதறி 100க்கும் மேற்பட்டோர் பலி

ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து சூடான் தலைநகர் கர்தூமுக்கு அந்த விமானம் 200 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் வந்தது. அப்போது கர்தூம் நகரில் வானிலை சரியில்லை. பலத்த காற்றும், இடியுமாக இருந்தது.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விமானி, கர்தூம் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கினார். அப்போது விமானம் சறுக்கி தாறுமாறாக ஓடியது. அப்போது திடீரென விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் விமானநிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
விமானம் முழுவதும் விபத்தில் எரிந்து சாம்பலாகி விட்டது. வானிலை சரியில்லாத நிலையிலும், விமானம் தரையிறங்க அனுமதித்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், ரன்வேயில் விமானம் சரியான முறையில் வந்து கொண்டிருந்தபோது என்ஜின் ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications