கண்டன தீர்மானம்-ராஜினாமா செய்வாரா முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அந் நாட்டு புதிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இதில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியும் முன் வந்துவிட்டார்.
முஷாரப் மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக ஷெரீப் உருவாக்கியுள்ள 10 அம்ச கண்டன தீர்மானத்தில்,
ராணுவ ஆட்சியை இரண்டு முறை அமல்படுத்தியது, அரசியல் சட்டத்தை மாற்றியது, நவாஸ் ஷெரீபை சிறையில் தள்ளியது, பிரதமருக்கே தெரியாமல் கார்கில் பகுதியில் படைகளை ஊடுருவ வைத்தது, இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாக காரணமாக இருந்தது,
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சிறை வைத்தது, துப்பாக்கி முனையில் சர்வாதிகார ஆட்சி நடத்தியது, ராணுவத்தை தன் தனிப்பட்ட படையாகப் பயன்படுத்தியது, தனக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு சலுகை காட்டியது,
தனது ஆட்சி நீடிப்பதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ராணுவத்தை பயன்படுத்தியது, சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா, ராணுவத்தை ஏவி விட்டு அறிவிக்கப்படாத போரை நடத்தியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
நவாஸ்-சர்தாரி கட்சிகளுக்கு பெரும்பான்மை உள்ளதால் இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது நிச்சயமாகிவிட்டது.
நாடாளுமன்றத்தால் கண்டிக்கப்பட்டுவிட்டால் அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும்.
ஆனால், எதற்கும் வளையாத முஷாரப் தனக்கு எதிரான இந்த கண்டன தீர்மான முயற்சிகளை நவாஸ் ஷெரீப்பின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் கண்டனத் தீர்மானம் நிறைவேறுவதற்குள் முஷாரப் ராஜினாமா செய்துவிட வேண்டும் என அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications