'கிரீமிலேயர்' வரம்பை ரூ. 6 லட்சமாக்க கோரிக்கை
டெல்லி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என அனைத்து மாநில பிற்பட்டோர் நலத்துறை ஆணையங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் உள்ள குடும்பத்தினர், க்ரீமி லேயர் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(முன்னதாக இந்த வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாகத் தான் இருந்தது. கடந்த 2004ம் ஆண்டில் தான் இது ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.)
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் என்ற பிரிவையே நீக்கி அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் பல மாநில அரசுகள், இந்த வருமான உச்சவரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
இந் நிலையில், டெல்லியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய கமிஷன் தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 20 மாநிலங்களை சேர்ந்த 36 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதில், பணியில் இருக்கும் பிற்பட்டோருக்கான வருமான உச்சவரம்பை ரூ.10 லட்சமாகவும், பிற்பட்ட விவசாயிகளுக்கான உச்ச வரம்பை 50 ஏக்கர் நிலம் என்றும் அதிகரிக்குமாறு மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் தலைவர்கள் கோரினர்.
பிற மாநிலங்கள் சராசரியாக இதை ரூ. 4 முதல் ரூ. 6 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இப்போதுள்ள விலைவாசியில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் கொண்டவர்களால் குழந்தைகளுக்கு ஒழுங்காக கல்வி கூட தர முடியாது என கர்நாடக மாநில பிற்பட்டோர் நல கமிஷன் தலைவர் துவாரகநாத் கூறினார். இதனால் க்ரீமி லேயர் வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்துவதே பிற்பட்டோருக்கு உதவியாக இருக்கும் என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications