தியானேஸ்வரன், மகனுக்கு முன் ஜாமீன்
சென்னை: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தியானேஸ்வரன், அவரது மகன் சுகனேஸ்வரன் மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் நடிகர் நெப்போலியன் தலைமையில் தனிகழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவராக தியானேஸ்வரனே நீடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் சூறையாடப்பட்டது.
இந்தப் பின்னணியில், எதிர் அணியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தான் கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகத்திற்குச் சென்றபோது தன்னை தியானேஸ்வரன், அவரது மகன் சுகனேஸ்வரன், அவரது நண்பர்கள் பிரபாகர், ராஜேஷ் ஆகியோர் தாக்கியதாக கூறியிருந்தார்.
இதையடுத்து நான்கு பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, நான்கு பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நான்கு பேரும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் 3 நாட்களுக்கு நேரில் ஆஜராக வேண்டும். ரூ. 10 ஆயிரம் உத்தரவாதத்தின் பேரில் முன்ஜாமீன் பெறலாம் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications