ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதுகுறித்து மற்றவர்களிடம் யோசனை கேட்டுக் கொண்டிருக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து இன்று சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சரத்குமார் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலி சிலிண்டர்களை கையில் ஏந்தியபடி பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தடுக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கூறுகிறார் ப.சிதம்பரம். பிறரிடம் யோசனை கேட்பவர்கள் மத்தியில் அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்கள். எனவே ப.சிதம்பரம் உடனடியாக நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.
விஜய டி.ராஜேந்தர் போராட்டம்:
இதேபோல இன்று சென்னையில், லட்சிய திமுக சார்பிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரும் திரளானோர் குறிப்பாக பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். விறகு அடுப்புகளை கையில் ஏந்தியபடி பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர், டீசல் விலை உயர்வோடு பிரச்சினை நின்று விடவில்லை. இப்போது லாரி வாடகையையும் 20 சதவீதத்திற்கு ஏற்றி விட்டனர். இதனால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications