சென்னை டூ நெல்லை-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
சென்னை: கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண். 0617) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
அதே போல், சென்னையில் இருந்து 15ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண் 0607) எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் கூடுதலாக வள்ளியூரில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications