நாளை திமுக உயர்நிலைக் கூட்டம்: பாமக உறவு குறித்து முடிவு!
கடலூர்: பாமகவுடனான உறவு குறித்து முடிவு செய்ய திமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
கடலூர் திமுக மகளிர் அணி மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் கருணாநிதி இதைத் தெரிவித்தார். அவர் பேசுகையில்,
நேற்றும் இன்றும் என்னுடைய கருத்தைக் கவரும் வகையிலும் கண்ணைக்கவரும் வகையிலும் காட்சி தந்து பேரணி நடத்தி, இரவு 12 மணி வரையிலே மாநாட்டையும் சிறப்புற நடத்தி, இன்று காலை முதல் மாலைவரை பல தலைப்புகளில் சிறப்புரையாற்றியும், படத் திறப்புரையாற்றியும் பல அரிய கருத்துக்களை வாரி வழங்கிய மாநில மகளிரணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரணியைக் கண்டு மலைத்துப் போனேன்.
இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மகளிரணியை பரப்ப வேண்டும், விரிவாக்க வேண்டும். திமுக கொள்கைகளை பரப்ப வேண்டும். சமுதாய சீர்திருத்த வித்துக்களை ஊன்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ செய்திகள். நல்லது நடந்தால் அதை நான்கு அங்குல செய்தியாகவும், அல்லது நடந்தால் ஐம்பது அங்குல செய்தியாகவும் போட சில பத்திரிகைகள் நாட்டிலேஉள்ளன.
அவற்றைப் பார்த்து பறக்கின்ற பாமக மக்களும் ஏராளம் உள்ளனர். நான் மறுக்கவில்லை. அவர்களை நம்பியே சில பத்திரிகைகள் நடக்கின்றன.
கடலூரில் மாநாடு என்றால் எதற்காக? கேட்பது கழகத் தோழரோ, மகளிர் அணியினரோ அல்ல, பத்திரிக்ைக்காரர்கள்தான். நல்ல எண்ணத்தோடு கேட்டால், விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். இவர்களுக்கும் வேறு சில கட்சிகளுக்கும் ஊடல் விளையுமா? ஊடர் முறியுமா? என்கின்ற அந்த எண்ணத்தோடு அந்த ஆசையோடு கேட்கிறவர்கள் உண்டு.
அவர்களுக்கு எல்லாம் நான் இன்றைக்கு பதில் சொல்வதாக இல்லை. இங்கு இருக்கும் நானோ, பொதுச்செயலாளரோ பொருளாளரோ நான்கு பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை சொல்லி விட முடியாது. உயர்நிலைக் குழு என்று ஒன்று இருக்கிறது. 17ம்தேதி மாலை உயர் நிலைக்குழு அண்ணா அறிவாலயத்தில் கூட இருக்கிறது.
அங்கே இதைப் பற்றி விவாதித்து, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நம்முடைய அரசியல் கணிப்பு என்ன என்று அன்றைக்குத்தான் வெளியிட முடியும். யாரோ சில பேர் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறார்கள் என்பதற்காக அதே பாணியிலே நானும் கட்சி நடத்த முடியாது. நானும் அவசரப்பட முடியாது.
எனவே 17ம் தேதி அதைப் பற்றி விரிவாகப் பேசுவோம். எனவே அந்த அளவோடு இந்தப் பிரச்சினையை நிறுத்துகிறேன் என்றார் கருணாநிதி.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications