Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நமக்கு புல்லரிக்கிறது.. 'சிலருக்கு' செல்லரிக்கிறது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கடலூரில் நடந்த மாபெரும் மகளிர் அணிப் பேரணியை நினைக்கும்போதே நமக்கு இதயம் புல்லரிக்கிறது. ஆனால், சிலருக்கோ செல்லரிப்பது போல இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உடன்பிறப்பே, ஏயப்பா எங்கிருந்து வந்தனர் இந்த மகளிர்?. பலநூறு, பல்லாயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று தொகை தொகையாகப் பல லட்சம் பேரல்லவா பவனி நடத்தினர்.

மாலை 4 மணிக்கு வந்து பேரணியைக் கண்ணுறும் மேடையில் அமர்ந்த நாங்கள், ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து இரவு 9.30 மணி அளவில்தான் அங்கிருந்து மாநாட்டு மேடைக்குச் சென்றோம் என்றால் பேரணியின் பேருருவைச் சொல்லவும் வேண்டுமோ.

மகளிர் தொண்டர் அணியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சீருடை அணிந்து வந்து அவர்கள் நடத்திய அணி வகுப்பு கண்கொள்ளா காட்சி. இன்னும் சில மாவட்டங்களிலிருந்து மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள், ஆண்கள் மட்டுமே இதுவரை வாசித்து வந்த இசைக் கருவிகளை தாங்களே முழக்கிய வண்ணம் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பேரணி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிய போதிலும், இன்னமும் அந்தப் பேரணி சென்று கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. அந்தப் பேரணியை நினைக்கும்போதே நமக்கு இதயம் புல்லரிக்கிறது.
சிலருக்கோ செல்லரிப்பது போல இருக்கிறது. நான் ஒன்றும் சொல்ல வேண்டாம், அதோ அதிகாலை நடைப் பயிற்சிக்கு வந்த 4 நண்பர்கள் பேசிக் கொண்டதை, நான் அப்போது கேட்டதை, இப்போது நீங்களும் கேளுங்களேன்.

''என்ன வீரராகவன்? கடலூர் மாநாட்டுக்குக் குடும்பத்துடன் போய் வந்திராக்கும். மகளிர் மாநாடு அது. அங்கே உமக்கு அனுமதி உண்டா என்ன, பெண்கள் மாநாட்டில் பெண்களை மட்டும் தானே உள்ளே விடுவார்கள்!''

''உண்மைதான், ஆனால் ஒன்று ஆண்கள் மாநாட்டில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அல்லவா, அது போல பெண்கள் மாநாட்டில் என்னைப் போல ஒரு சில ஆண்களை அனுமதிப்பது ஒன்றும் தவறில்லையே. அந்த முறையில் லட்சக்கணக்காக அப்படி வந்த மக்கள் வெள்ளம் தான், கடலூர் வீதிகளில் பெருக்கெடுத்தோடியது. ஜூன் 14, 15 நாட்களில் என்றால் அது மிகப்படுத்திச் சொல்லப்படும் ஒன்றல்ல''

''பரவாயில்லையே, ஏற்கனவே டீசல் விலையை ஓரளவு குறைத்து ஏழையெளிய நடுத்தர மக்களின் வயிறைக் குளிர வைப்பதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதமர் விடுத்த வேண்டுகோளை மனத்தில் பதித்து, தமிழக அரசு அந்தச் சுமையை, அதாவது ஆண்டு ஒன்றுக்கு 260 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுக் கொண்டு அறிவிப்பு செய்தது.
தொடர்ந்து அது போல மகளிர் மாநாட்டில் மகளிரின் குறையை போக்குகின்ற வகையில் நம்ம முதல்வர் அறிவித்திருப்பது (கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு) சாமான்ய மக்களுக்கு மேலும் உற்சாகத்தை அல்லவா அளித்திருக்கிறது!''

''ஆமாம் சார், ஆமாம் ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல் மக்களுக்குத் தேவையான அவசர அவசியப் பிரச்சினைகளில் மாநாடு தனது முழுக் கவனத்துவம் செலுத்தியிருக்கிறது என்பதற்கு அடையாளம் தான் கேஸ்' விலையைக் குறைத்து அறிவித்திருப்பது. எங்க வீட்டிலேயே பொம்பளைங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏகப்பட்ட பாராட்டுகள். இரண்டே ஆண்டுகளில் என்ன சாதனை.''

''எது நேரினும் கழக ஆட்சி இப்படித்தான் செயல்படும். இப்படித்தான் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தும்''

''கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருவோம்'' என்பதில் மாற்றமின்றி, நடந்து கொள்வது போலவே தேர்தல் அறிக்கையிலே சொன்னது முழுவதையும் நடைமுறைப்படுத்திக் காட்டுவோம் என்று அல்லவா செயல்படுகிறார்கள்''

மக்களின் ஆதரவு கழகத்திற்கும், கழக அரசிற்கும் நாளும் வளர்வது கண்டு மக்கள் விரோதிகள் தான் ஏதோ வக்கணை பேசுவார்கள். இந்த என் கருத்தை ஆமோதிப்பது போலத்தான் நடை பயிற்சியிலே நான்கு பேர் நடத்திய உரையாடல் அமைந்தது.

இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+