'குரு பேச்சு' முடிந்துபோன பிரச்சனை-ராமதாஸ்

திண்டிவனம் அருகே உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் பாமக மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியி்ன் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
திமுக-பாமக இடையிலான உறவு தொடர்ந்து சீர்குலைந்து வரும் நிலையில் திமுக தலைவர்களின் தலையை வெட்டுவேன் என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சால் திமுக கடுப்பானது.
இதையடுத்து கூட்டணியை விட்டு பாமகவை நீக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதே போல திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என பாமக நிர்வாகிகளும் ராமதாசிடம் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று பாமக செயற்குழு கூட்டப்பட்டது. இதில் பேசிய பல நிர்வாகிகளும் திமுக, நம்மை நீக்கும் முன் நாமே கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், தங்களை திமுகவே, நீக்கட்டும் அதுவரை பொறுத்திருப்போம் என்ற முடிவில் ராமதாஸ் உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
காடுவெட்டி குரு பிரச்சனை முடிந்த போன கதை. அதை ஏன் முதல்வர் இப்போது அரசியலாக்குகிறார் என்று தெரியவில்லை.
மேலும் குரு மீது நான் எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து முதல்வரே எனக்கு ஒரு கடிதம் கூட எழுதினார் என்றார் ராமதாஸ்.
இதனால் இன்றைய கூட்டத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது என்பது போன்ற முடிவும் எதுவும் எடுக்கப்படவில்லை. நாளை திமுக எடு்க்கப் போகும் முடிவைப் பொறுத்தே பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications