தமிழில் கிரிக்கெட் 'லைவ் ஸ்கோர்' தரும் தட்ஸ்கிரிக்கெட்.காம்
பெங்களூர்: ஒன் இண்டியா (oneindia.in) குழுமத்தின் கிரிக்கெட் இணையத் தளமான தட்ஸ்கிரிக்கெட்.காம் (thatscricket.com), தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் கிரிக்கெட் லைவ் ஸ்கோரை வழங்குகிறது.
இதுவரை இணையத் தளங்களில் கிரிக்கெட் ஸ்கோர் ஆங்கிலத்தில்தான் 'லைவாக' வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தட்ஸ்கிரிக்கெட்.காம் தளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் நேரடி ஸ்கோரை வழங்குகிறது.
இதுகுறித்து ஒன் இண்டியா இணையத் தளங்களை நடத்தும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் கூறுகையில், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரின் மூலம் உலக கிரிக்கெட்டின் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இதை மனதில் வைத்தே ஐந்து இந்திய மொழிகளில் கிரிக்கெட் ஸ்கோரை வழங்க தீர்மானித்தோம். நிச்சயம் இது பிராந்திய மொழி கிரிக்கெட் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறோம்.
இந்திய மொழி இணையத் தளங்களில் oneindia.in முன்னோடியாக திகழ்கிறது. ஆன்லைன் வரி விளம்பரங்கள், மொபைல் போர்ட்டல், எஸ்.எம்.எஸ். அப்டேட்டுகள் என வளர்ந்து தற்போது கிரிக்கெட் ஸ்கோர்களை பிராந்திய மொழிகளிலும் வழங்கத் தொடங்கியுள்ளோம்.
இந்திய மொழி இணையத் தளங்களிலேயே அனைவரும் நாடும் தளமாக ஒன் இண்டியாவை மாற்றுவதே எங்களது லட்சியம் என்றார்.
தற்போது தட்ஸ்கிரிக்கெட்.காம் தளத்தில், கிரிக்கெட் போட்டிகள் லைவ் செய்யப்பட்டு வருகின்றன. முழுமையான ஸ்கோர்போர்ட் மற்றும் ஒவ்வொரு பந்து குறித்த முழுமையான விவரங்கள் லைவ் செய்யப்படுகின்றன. தற்போது இவை அனைத்தையும் ஆங்கிலம் தவிர ஐந்து இந்திய மொழிகளிலும் அறிந்து கொள்ள முடியும்.
சமீபத்தில்தான் ஒன் இண்தியா செல்போன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, WAP அடிப்படையிலான thatscricket.oneindia.mobi என்ற புதிய தளத்தை தொடங்கியது. இதன் மூலம் போட்டிகள், கிரிக்கெட் தொடர்கள் குறித்த விவரம், கிரிக்கெட் செய்திகள், அணி, வீரர்கள் ரேங்கிங் பட்டியல் உள்ளிட்டவற்றை மொபைல்போன்கள் மூலம் பெறலாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications