12 எஸ்.பிக்கள், 3 டிஐஜிக்கள் இட மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 12 எஸ்.பிக்கள், 3 டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் சூப்பிரண்டாக இருந்து வரும் சோனல் மிஸ்ரா விடுமுறையில் போகிறார். தஞ்சை மாவட்ட எஸ்.பி. தேன்மொழி, சிறப்பு போலீஸ் பிரிவு 4வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகமாற்றப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் துணை ஆணையர் அமல்ராஜ் விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி. சம்பத்குமார், தஞ்சை எஸ்.பியாகியுள்ளார். சேலம் எஸ்.பி. பாஸ்கரன், ஆவின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கொள்ளைத் தடுப்பு எஸ்.பி. செந்தில்குமாரி, சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்து வந்த சத்தியமூர்த்தி, மாநில உளவுப் பிரிவு சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில உளவுப் பிரிவு சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பாண்டியன், அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அண்ணா நகர் துணை ஆணையர் ஜெயகவுரி கொள்ளைத் தடுப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை துணை ஆணையர் பாலநாகதேவி அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை கண்காணிப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயந்தி, சேலம் போக்குவரத்து குற்றப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் இளங்கோ, கோட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சரக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை சரகத்திற்கு மாற்றப்ட்டுள்ளார். திண்டுக்கல் சரகத்தையும் கூடுதலாக கவனித்து வருவார்.
திருச்சி சரக டிஐஜி அசோக்குமார் தாஸ், சென்னை தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி சந்தீப் ராய்ரத்தோர், திருச்சி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications