கரூர் அருகே டெட்டனேட்டரை கொள்ளையடித்த 7 பேர் கைது !
கரூர்: கரூர் அருகே சில தினங்களுக்கு முன்பு டெட்டனேட்டர் திருட்டுப் போன வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன் (42).
இவர் அப்பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு தேவையான வெடி பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 24 ம் தேதியன்று அவரது குடோனில் இருந்து சுமார் 17 ஆயிரத்து 100 டெட்டனேட்டர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து முருகேசன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை பிரிவை சேர்ந்தவர்கள் டெட்டனேட்டர் கொள்ளையர்களை கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகன், செந்தில், முருகேசன், பிரகாஷ், சாமிகண்ணு, முத்துச்சாமி, செளந்தராஜன் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் டெட்டனேட்டர்களை கொள்ளையடித்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications