திமுக கூட்டணி வலுவிழப்பது நல்லதல்ல: திருமாவளவன்
விழுப்புரம்: சமூக அக்கறை இல்லாத சக்திகளும், மதவெறி சக்திகளும் மக்களை ஏய்க்கும் போது தி.மு.க. கூட்டணி வலுவிழந்து இருந்தால் அது நல்லது அல்ல என்று விடுதலைச் சிறுத்ைதகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத சக்திகளையும், மதவெறி சக்திகளையும் முறியடிக்க தி.மு.க. கூட்டணி வலுவாய் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
திரைப்பட மாயை மற்றும் மதவெறி பாசிசம் ஆகியவை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போட்டி போடும் சூழ்நிலையில் அரசியல் களத்தில் தி.மு.க. கூட்டணி மிகுந்த வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும்.
எனவே தி.மு.க., பா.ம.க. இடையேயான உரசல்கள் இருந்தாலும் விரிசல்கள் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.இதுதொடர்பாக நேரில் சந்தித்து அவர்களிடம் சமாதானத்திற்கான பணியில் ஈடுபடுவதில் தோழமை கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் இதனை கடமையாக கருதுகிறோம்.
தி.மு.க., பா.ம.க. இடையே ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பெரிய அளவிலே பாதிப்பதாக மாறாது என்று நம்புகிறோம். அவ்வாறு கூட்டணி உறவில் பாதிப்பு ஏற்படுமானால் விடுதலை சிறுத்தை சமாதான நடவடிக்கையில் ஈடுபடும்.
ஒருபுறம் சமூக அக்கறை இல்லாத சக்திகளும், இன்னொரு புறம் மதவெறி சக்திகளும் மக்களை ஏய்க்கும் போது தி.மு.க. கூட்டணி வலுவிழந்து இருந்தால் அது நல்லது அல்ல.
தோழமை கட்சிகளை கட்டி காப்பாற்றி வருபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அதுபோல் தற்போதைய சூழ்நிலையிலும் நல்லிணக்கமான முடிவு மேற்கொள்வார் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
பேசித் தீர்க்க கிருஷ்ணசாமி கோரிக்கை:
இதற்கிடையே, பிரச்சினைகளை திமுகவும், பாமகவும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஏற்படுத்த சோனியா காந்தி கடும் முயற்சி எடுத்தார். அவரது நல்லெண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
கூட்டணி தர்மத்தை புரிந்து கொண்டு நாட்டின் நலன் கருதி அனைவரும் செயல்பட வேண்டும். மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் அவற்றை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
கருத்து வேறுபாடு இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணசாமி.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications