அம்பை: ரூ.500 கோடியில் சர்க்கரை ஆலை
அம்பாசமுத்திரம்: அம்பை அருகே இடைகாலில் ரூ.500 கோடி முதலீட்டில் நவீன சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
இடைகாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அம்பை வட்டார விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கரும்பு ஆலை அமைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி இடைகாலில் ரூ.500 கோடி முதலீட்டில் 250 ஏக்கரில் அதி நவீன சர்க்கரை ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஜூலை மாதம் தொடங்கவிருக்கின்றன. இது அரசு அனுமதியுடன் நடைபெறும் தனியார் ஆலை.
இந்த சர்க்கரை ஆலையில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சர்க்கரை உற்பத்தி செய்யலாம். 750 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் கரும்பு சக்கையில் இருந்து 50 மெகா வாட் மின்சாரமும், 1 லட்சம் லிட்டர் எத்தானாலும் தயாரிக்கலாம்.
இந்தியாவிலேயே நவீன தொழில் நுட்ப அடிப்படையில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவது நமது மாநிலத்தில்தான். கரும்பு நடவு முதல் அறுவடை வரை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலையின் சார்பில் இனி வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றுத் தரப்படும். நவீன தொழில் நுட்ப அடிப்படையில் கரும்பு உற்பத்தி செய்வதால் 10 முதல் 15 டன் வரை சர்க்கரை அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆலை 2009 டிசம்பர் மாதத்திலிருந்து செயல்படத் துவங்கும், என்றார் ஆவுடையப்பன்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications