லண்டனிலிருந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்

அவர் ஊரில் இல்லாத நிலையிலேயே கட்சியின் உயர் நிலைக் கூட்டம் நடந்து பாமகவுடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்டதும், அதே போல திமுக மகளிரணியின் முதல் மாநாட்டை ஸ்டாலின் புறக்கணித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கடந்த 15 நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். அவர் முதுகு வலிக்காக சிகிச்சை பெற சென்றதாகக் கூறப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டன. புதிய சட்டசபை அடிக்கல் நாட்டு விழா, கடலூர் திமுக மகளிர் மாநாடு, பாமகவை நீக்கும் முக்கிய முடிவை எடுத்த திமுக உயர் நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம். இந்த மூன்றிலும் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
கடலூர் மாநாட்டில் அழகிரியின் மகள் கயல்விழியை திமுக நேரடியாக அரசியலில் களமிறக்கியது. இதற்கு அழகிரிக்கு கனிமொழியின் ஆதரவும் இருந்தது. இதனால் இந்த மாநாட்டை ஸ்டாலி்ன் புறக்கணிக்க முன்பே திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் அழகிரியுடன் நேரடி மோதலில் இறங்கியுள்ள சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஸ்டாலினை சந்திப்பதற்காக தனது சொந்த விமானத்தில் லண்டன் சென்றார்.
இந் நிலையில் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை வரவேற்றனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications