28 நாள் குஜ்ஜார் ரயில் பாதை மறியல் போராட்டம் வாபஸ்
ஜெய்ப்பூர்: கடந்த 28 நாட்களாக ரயில் பாதையை ஆக்கிரமித்து நடத்தி வந்த தர்ணாப் போராட்டத்தை குஜ்ஜார்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
பழங்குடியினர் அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மே 23ம் தேதி குஜ்ஜார் சமூகத்தினர், குஜ்ஜார் இட ஒதுக்கீட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் பெரும் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் ராஜஸ்தானில் நடந்த இந்தப் போராட்டம் பின்னர் வட இந்தியாவுக்கும், தலைநகர் டெல்லிக்கும் இடம் பெயர்ந்தது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பயானா அருகில் உள்ள பில்லுகபுரா-கார்வாடி ரயில் பாதையை மறித்து தர்ணா நடத்தப்பட்டு வந்தது.
இதன் காரணமாக மும்பை - டெல்லி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில், குஜ்ஜார் போராட்டத்திற்கு ராஜஸ்தான் அரசு தீர்வு கண்டதையடுத்து இப்போராட்டத்தை குஜ்ஜார் சமூகத்தினர் விலக்கிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து இந்த மார்க்கத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்த ரயில் பாதைகளை சீரமைக்குப் பணியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கியுள்ளனர். விரைவில் சேதம் சரி செய்யப்பட்டு வழக்கமான ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிக்கந்தரா, குஷாலிபுரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த ரயில் பாதை மறியல் போராட்டங்களும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாதைகள் அனைத்திலும், தண்டவாளத்தில் கூடாரம் போட்டு அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டும், தண்டவாளத்தை சேதப்படுத்தியும் குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications