சிறுமியைக் கற்பழித்த மூன்று பேர் கைது

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை கற்பழித்த முன்று காமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அருகே உள்ள சின்ன வடவாடியை சேர்ந்தவர் கொளஞ்சி . இவரது மகள் தேவி (15). இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த பிரகாஷ், பாவைடை ராயன், வெங்கடேஷன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது தேவி இவர்களை கண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று கை, கால்களை கட்டி போட்டு கரும்பு காட்டில் வைத்து தேவியை மூன்று காமுகர்களும் கற்பழித்துள்ளனர்.

இது குறித்து தேவியின் தாய் அஞ்சலை மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விரைவாக செயல்பட்டு தேவியை கற்பழித்த மூன்று காமுகர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+