மத்திய அரசுக்கு மாயாவதி ஆதரவு வாபஸ்
டெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மாயாவதி ஆதரவு அளித்து வந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 எம்.பிக்கள் லோக்சபாவில் உள்ளனர்.
இந் நிலையில் சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளும் மோதல் போக்கில் இறங்கின.
இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மாயாவதியின் பரம விரோதியான முலாயம் சிங் யாதவின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தீர்மானித்தது. இதனால் கடுப்படைந்தார் மாயாவதி.
இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி எனது பெயரையும், பகுஜன் சமாஜ் கட்சியின் பெயரையும், உ.பி. அரசின் பெயரையும் கெடுக்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒன்றுதான் என்பதை நிரூபித்து விட்டது.
இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது என்றார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் ஒருபக்கம் மிரட்டி வரும் நிலையில் மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கை, நிச்சயம் மத்திய அரசுக்கு சந்தோஷமளிக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications