ஜூலை 2 முதல் ஸ்டிரைக்-ஜவுளி ஆலை அதிபர்கள் முடிவு
ஈரோடு: பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த கோரி வரும் ஜூலை 2 ம் தேதி தமிழகம் முழுக்க வேலை நிறுத்தம் செய்ய ஜவுளி தொழிற்சாலை அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் இந்திய ஜவுளி வர்த்தகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுளது.
மேலும், பருத்தி சாகுபடி குறைவு, பஞ்சு விலையேற்றம், டீசல் பெட்ரோல் விலை உயர்வு, தொழில் மந்த நிலை, நூல் விலையேற்றம், மின் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சனைகள் காரணமாக ஜவுளி தொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் ஜவுளி ஆலை அதிபர்கள் மற்றும் அதை சார்ந்த தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஈரோட்டில் அவசர ஆலோசனை கூட்டம் ஈரோடு கிளப் மெலாஞ்சில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஸ்பின்னிங் மில், சைசிங் மற்றும் வார்பிங் மில்கள், விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை போன்ற தொழில்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு மதிவாணன் தலைமை தாங்கினார். அனைத்து வணிகர் சங்க தலைவர் நடராஜ முதலியார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். கழிவு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பஞ்சு மற்றும் கோன் நூலுக்கு விதித்துள்ள 4 சதவீத வரியை நீக்க வேண்டும்.
சாயக் கழிவு பிரச்சனைகள் குறித்து மாநில அரசு உரிய திட்டங்களை வகுத்து மூடப்பட்டுள்ள சாயப் பட்டறைகளை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 2 ம் தேதி தமிழகம் முழுவதும் ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications