பாமக நீக்கம் முடிந்து போன விஷயம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பாமக நீக்கம் முடிந்து போய் விட்ட விவகாரம். இனிமேல் மறு பரிசீலனையே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முயன்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று முதல்வர் கருணாநிதியை திருமாவளவன் சந்தித்தார்.

அப்போது குரு பேச்சு தொடர்பாக பாமக வருத்தம் தெரிவித்தால் மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் தெரிவித்ததாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

ஆனால் குரு விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்ைல என்று நேற்று நடந்த பாமக பொதுக்குழுக்கூட்டத்திற்குப் பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் திமுகவை கடுமையாக சாடியும் அவர் பேசியிருந்தார்.

இந்த நிைலயில் நேற்று நடந்த ஆட்சியர்கள் மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து உங்களது கருத்து என்ன. குரு பேசியதெல்லாம் உண்மைதான். ஆனால் 4 மாதமாகிறது என்று பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: காலதாமதம் ஆனால் பேசிய பேச்சு மறைந்து விடுமா?

கேள்வி: தற்போது இந்திரா காந்தியைக் கொலை செய்ய திமுக முயற்சித்ததாக ராமதாஸ் சொல்கிறாரே?

கருணாநிதி: காதிலே பூ வைத்திருப்பவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இது.

கேள்வி: பாமகவை விலக்குவது குறித்த முடிவை, மற்ற கட்சிகளிடம் கலந்து கொள்ளாமல் திமுக முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்களே?

கருணாநிதி: இது எங்களது கட்சிக்குள் எடுக்கிற முடிவு. மாநிலங்களவை எம்பி பதவி, ஆரம்பத்திலேயே அவர்களுடைய கட்சிக்கு தரப்பட்டபோது, எல்லாக் கட்சிகளையும் கேட்டுக் கொண்டு கொடுங்கள் என்று சொல்லப்படவில்லையே?

கேள்வி: திருமாவளவன் முயற்சி எடுத்து, பாமகவை மீண்டும் சேர்ப்பதற்காக கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தித்து வருகிறார். உங்களையும் சந்தித்துக் கேட்டதாக சொல்லி இருக்கிறாரே?

கருணாநிதி: ஆமாம், என்னைக் கேட்டார். அவ்வளவு மோசமாக பேசி விட்டு, ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டேன் என்று சொன்னால், அவர்களோடு எப்படி ஒன்றாக கூட்டணி வைக்க முடியும் என்று கேட்டேன். வருத்தம் தெரிவிப்பார்கள் என்று உறுதியளித்து விட்டு அந்த நம்பிக்கையோடு போனார்.

கேள்வி: வருத்தம் தெரிவித்தால்?

கருணாநிதி: அதெல்லாம் முடிந்து போன விஷயம்.

கேள்வி: குரு மீது ஏதாவது வழக்கு?

கருணாநிதி: அதெல்லாம் எனக்குத் தெரியாது. சட்டப்படி நடைபெற வேண்டியது நடைபெறும் என்றார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+