பாக்: மரண தண்டனை ரத்தாகிறது-தப்புகிறார் சரப்ஜித்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் அதை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிபர் முஷாரப்புக்கு, பிரதமர் கிலானி பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து இந்தியர் சரப்ஜித் சிங் தலை தப்புகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த சரப்ஜித் சிங், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து லாகூர் சிறையில் அவர் பல வருடமாக அடைபட்டுள்ளார்.
அவருக்கு இருமுறை தூக்கில் போட நாள்குறிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய அரசின் தொடர் முயற்சி மற்றும் முன்னாள் பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் பர்னி ஆகியோரின் முயற்சிகள் காரணமாக சரப்ஜித் சிங்கின் தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சரப்ஜித் சிங்குக்கு நிம்மதி அளிக்கும் வகையிலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் வாடி வரும் அனைத்துக் கைதிகளுக்கும் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்து அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளார் கிலானி.
இதையடுத்து சரப்ஜித்சிங் உயிர் தப்பும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இத்தகவலை பர்னியும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் 3 அல்லது நான்கு நாட்களில் இதுதொடர்பான உத்தரவை அதிபர் முஷாரப் பிறப்பிப்பார் எனவும் பர்னி தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications